𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸
382 subscribers
11 photos
2 videos
2 files
110 links
அனைத்து செட்டியார் உட்பிரிவுகளில், திருமண வயதில் உள்ள வது(பெண்) வரன்(ஆண்) தகவல்கள் கொண்ட குழு. நமது சமூகத்திற்கான எனது பங்களிப்பாக இது முற்றிலும் ஒரு இலவச சேவையே.
வாட்ஸ்அப் எண் மற்றும் அழைப்பிற்கு: +919444056959
அன்புடன்,
பாலாஜி குணசேகரன் @BalajeeG
Download Telegram
நான் இங்கு புதிய பதிவுகள் செய்யவில்லை என்றாலும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் என்னை தினமும் தொடர்புகொண்டு சில பொருத்தமான பெண் ஜாதகத்தின் தகவல்களை கேட்டறிந்து வருகின்றனர். ஆனால் ஒருசிலர் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் வரன்களை பார்வையிடாமல், புதிய பதிவுகளுக்கு காத்திருக்கின்றனர். அதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏற்கனவே பதிவு செய்த வரன் (ஆண்), வது(பெண்)க்களுக்கே எதும் திருமண பேச்சுவார்தை தொடங்கியதா என்று தெரியவில்லை.

ஒருசிலர் எந்த வித சுய முயற்சியும் எடுக்காமல், அவரவர் பிள்ளைகளுக்கு நானே தேடி தேடி பொருத்தம் பார்த்து, தனியாக அவர்களுக்கு எடுத்து அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது எப்படி சாத்தியம். நான் ஒருவனே பதிவும் செய்து, பொருத்தமும் பார்த்து, ஒவ்வொருவருக்காக தனியாக தேடி, பேசி, அனுப்பி கொண்டிருந்தால், இதர பணிகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்னால். உங்கள் பிள்ளைகளுக்கு, பொருத்தமான வரன்களை நீங்களே தேடிக்கொள்ள, ஏன் பொருத்தம் பார்க்கும் நட்சத்திரம் சார்ட் கூட இங்கே பதிவு செய்திருக்கிறேன்.மேலும் இந்த சேவையை எளிமைபடுத்தும் வசதிகளை தான் பின்புலத்தில் என்னால் ஏற்படுத்தி கொடுக்க முடியும். மற்றவை உங்கள் கையில்😁
உறவினர்களாகிய
அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம்.

தீப ஒளி திருநாள் நெருங்குவதால், தீப ஒளி பண்டிகை சீட்டு சம்மந்தப்பட்ட நிர்வாக குழு ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் என்னால் 10ம் தேதி வரை சரிவர பதிவுகள் செய்ய இயலாது.

சரிவர என்று தான் பதிவிடுகிறேன். ஏனெனில் நிச்சயம் இடைப்பட்ட கிடைக்கும் நேரத்தில் இங்கு வரன் பதிவுகள் செய்வேன். நவம்பர் 10ம் தேதிக்கு பிறகு, அனைவரும் எதிர்பார்த்தபடி தினசரி பதிவுகள் கட்டாயம் வரும். அதுவும் தானியங்கி முறையில், முன்பைவிட பாதுகாப்பான வழியில், பிறர் இங்கு பதியும் வரன்கள் விபரங்களை எடுத்து தவறாக பயன்படுத்த முடியாதபடி, பதிவுகள் நிச்சயம் தொடர்ந்து வரும்.

நவம்பர் 10 வரை உங்கள் அனுமதியுடன், கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்கிறேன். நன்றி. 🙏😊
👍1
𝗖𝗵𝗲𝘁𝘁𝗶𝗮𝗿 𝗠𝗮𝘁𝗿𝗶𝗺𝗼𝗻𝘆 ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸 pinned «உறவினர்களாகிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். தீப ஒளி திருநாள் நெருங்குவதால், தீப ஒளி பண்டிகை சீட்டு சம்மந்தப்பட்ட நிர்வாக குழு ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் என்னால் 10ம் தேதி வரை சரிவர பதிவுகள் செய்ய இயலாது. சரிவர என்று தான்…»
Channel name was changed to «Chettiar Matrimony ™ - செட்டியார் மணமாலை ™ 🤴👸»
தீப ஒளி திருநாள்.png
177.9 KB
அனைத்து உட்பிரிவு செட்டியார்களுக்கான செட்டியார் சங்கம் .com வலைமனையை பார்வையிட கீழே உள்ள லிங்க்கை அழுத்தி பார்க்கவும்...
👇
https://www.ChettiarSangam.com/
👆
இந்த வலைத்தளத்தில் பதியும் அனைத்து தகவல்களும் பன்மடங்கு பாதுகாப்பு வாய்ந்தது. அதற்கான ஆதார பூர்வ சான்றிதழ் (Secure Socket Layer Certificate) வழங்கப்பட்டுள்ளது. 😊