O/L எழுதிவிட்டு, A/Lஐ தொடங்கியிருக்கும் அன்புத் தம்பி தங்கையர்களுக்கு,
நான் படித்தது Biologyஎன்பதால் அதனைப் படிக்கத் தொடங்கியிருக்கும் உங்களுக்கு இது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
இப்போது நீங்கள் தொடங்கியிருப்பது, மிகவும் போட்டி நிறைந்த ஒரு பரீட்சை. இதனை ஒரு 100 மீட்டர் ஓட்டத்திற்கு ஒப்பிடலாம். வேகமாகவே ஆரம்பித்து, வேகமாகவே ஓடி முடிக்க வேண்டும். நின்று நிதானித்து, ஆறுதலாக ஓடி முடிக்க இது மரதன் ஓட்டமல்ல.
2 வருடங்கள் பார்த்திருக்க கடந்து போகும்.
முதலாவது உங்களில் நம்பிக்கை வையுங்கள். ஐன்ஸ்டீனுக்கு பிஸிக்ஸ் படிப்பித்தவர் நான்தான், என்னிடம் படிக்காவிட்டால் நீங்கள் பாஸாகவே முடியாது, என்னைக் கேட்டுத்தான் எக்ஸாம் பேப்பர் எடுப்பார்கள் என பீலா விடும் டியூட்டரி ஆசிரியர்கள் பலரை நீங்கள் கடந்து வர வேண்டியிருக்கும். நீங்கள் யாரிடம் படித்தாலும், விளங்கிப் படியுங்கள். அதனை சுயமாக பரிசோதித்துப் பாருங்கள். அனைத்து பாடங்களிலும், அனைத்து அலகுகளிலும், புத்தகங்கள் உள்ளன. அவற்றை வாங்கிப் படியுங்கள். அவற்றிற்கான கேள்விகள் தொகுக்கப்பட்ட புத்தகங்கள் உள்ளன. அவற்றைப் படியுங்கள். சுயமாக படிக்கும் போது, ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும். பிறகு அதே உங்களுக்கு பழக்கமாகிவிடும். இது பல்கலைக்கழக படிப்பிற்கு அவசியமானது.
எப்படி படிப்பது என Dr Halith Mohemadbuhary இன் ஒரு புத்தகம் இருக்கிறது. கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகங்களில் ஒன்று. அதை அப்படியே பின்பற்றினால், இந்த பரீட்சைகளை சாதாரணமாக கடக்கலாம்.
உங்களுடைய syllabus இரண்டு வருடங்களைக் கொண்டது. குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாவது அனைத்து syllabusஐயும் முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அடுத்த 3 மாதங்களும், கிளாஸ் கிளாஸ் என்று அலையாமல், வீட்டிலிருந்தே மீட்டல் செய்வதற்கு உதவியாக அமையும்.
அதற்காக ஒரே வருடத்தில் அனைத்து பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
எங்களது Physics ஆசான் கோவிந்தராஜ் சேர் ஒரு வருடம் முடியும் போது, physicsஇல் Mechanics வரை மட்டுமே முடித்திருந்தார். சில இடங்களில் முழு syllabusம் முடிந்து பேப்பர் கிளாஸ்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அடுத்த நான்கு மாதங்களில், முழு syllabusஐயும் முடித்தோம். மிகுதி இருந்த பாடங்கள் அனைத்தையும் இந்த mechanicsஓடு connect பண்ணிவிட்டார். Bio படிப்பவர்களுக்கு Physics கஷ்டம் என்ற கற்பிதங்களையெல்லாம் உடைத்தெறிந்து, கடைசி தவணைப் பரீட்சையில் Physicsஇல் 98 மார்க்ஸ் எடுத்து (மாவட்டத்திலேயே அதி கூடிய புள்ளி), A/Lஇல் சுப்பர் மெரிட்டில் பாஸாக முடிந்தது.
இந்த இரண்டு வருடங்களும் இந்த போனையும், சோஷியல் மீடியாக்களையும் தள்ளி வையுங்கள். ஆண் மாணவர்கள் சேர்ந்து படிக்கிறோம் என வீடுகளை மகாம் ஆக்கி, ஒன்றாக சேர்ந்து நாசமாகாமல், இந்த இரண்டு வருடங்களையும் கவனமாக பாவியுங்கள்.
இதுதான் fun எடுப்பதற்கான காலம் என நினைக்காதீர்கள். இந்தக் காலத்தில் fun எடுத்துத் திரிந்த உங்கள் சீனியர்களைக் கேட்டால், இன்னும் கொஞ்சம் படித்திருக்கலாமே என்பார்கள்.
நான் பரீட்சை எழுத இருந்த நாட்களில் சுனாமி அடித்தது. இந்த சமூகம், வேலை என்று திரிந்த என்னை, ஒரு நாளிரவு ஒரு சகோதரர் நிறுத்தி
"நிஹாஜ், நீ போய் படி, இந்த சமூகம், சேவை எல்லாம் நாங்கள் பார்க்கிறோம். நீ படித்து வந்து செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறது" எனக் கூறி வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அவருக்காக நான் இப்போதும் பிரார்த்திக்கிறேன்.
நீங்கள் என்னதான் கஷ்டப்பட்டு முயற்சித்தாலும், நீங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே உங்கள் கதையை இந்த சமூகம் நின்று கேட்கும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நான்தான்.
Dr Ahamed Nihaj
MBBS, MD Orthopaedics, DSICOT
Clinical Fellow in Orthopaedics
West Suffolk Hospital NHS trust
United Kingdom

quadratic equation 20.06.2021. @ 10;30am.pdf
579.2 KB